பாலியல் துன்புறுத்தல் குஜராத்தில் ஓடும் லாரியில் இருந்து குதித்த 6 பள்ளி மாணவிகள்

சோட்டா உதேபூர்: குஜராத்தில் ஒன்றிய பாஜ அரசு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக பூபேந்திர படேல் பொறுப்பில் உள்ளார். பெண்களுக்கு அதிகாரமளிப்பதை பற்றி பேசும் பாஜ ஆட்சி நடக்கும் மாநிலத்தில் பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு அவலம் நேர்ந்துள்ளது. குஜராத்தில் உள்ள சோட்டா உதேபூர் மாவட்டத்தின் சன்கேதா தாலூகாவை சேர்ந்த மாணவிகள் 5 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கு அந்த வழியாக செல்லும் லாரியில் லிப்ட் கேட்டு செல்வது வழக்கம்.

வழக்கம் போல, நேற்று முன்தினம் பள்ளி செல்ல லாரியில் ஏறிய 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை டிரைவர் உள்பட 6 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றனர். இதில் இருந்து தப்ப 6 சிறுமிகளும் ஓடும் லாரியில் இருந்து குதித்தனர். இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் சில மாணவிகள் காயமடைந்தனர். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அஷ்வின் பில்லை போலீசார் கைது செய்தனர். டிரைவர் உள்ளிட்ட மற்ற 5 பேரை தேடி வருகின்றனர். குஜராத்தில் பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு நேர்ந்துள்ள இந்த அவலம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

The post பாலியல் துன்புறுத்தல் குஜராத்தில் ஓடும் லாரியில் இருந்து குதித்த 6 பள்ளி மாணவிகள் appeared first on Dinakaran.

Related Stories: