செக் மோசடி வழக்கில் தீர்ப்பு: அமைச்சரின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: செக் மோசடி வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர் எஸ்.மது பங்காரப்பாவின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ்.மது பங்காரப்பா, ஆகாஷ் ஆடியோ-வீடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரூ.6.96 கோடிக்கான காசோலையை 2011ம் ஆண்டு இவர் வழங்கியிருக்கிறார். ஆனால் அது பவுன்ஸாகி இருக்கிறது. இது தொடர்பாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மது பங்காரப்பா ரூ.50 லட்சம் செலுத்தப்பட்டுவிட்டதால், இந்த வழக்கை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு முழுப் பணத்தையும் செலுத்தத் தவறியதால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு 2022ல் எம்பிக்கள் – எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த நீதிபதி, மது சந்திராவை குற்றவாளி என்று அறிவித்தார். மேலும் மீதமுள்ள ரூ.6.10 கோடியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டார். மது பங்காரப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்ததால், அவர் ஜாமீன் கோரியும், சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் பெங்களூரு நகர மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அப்போது அந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘புகார்தாரருக்கு செலுத்த வேண்டிய தொகையில் 20% வைப்புத் தொகையாக ெசலுத்த வேண்டும். நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது’ என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post செக் மோசடி வழக்கில் தீர்ப்பு: அமைச்சரின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: