கலைஞர் இருந்திருந்தால் மகா கவிதை நூலை எழுதியுள்ள வைரமுத்துவை உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கனமழை பெய்யும் என கூறினார்களே தவிர எவ்வளவு மழை பெய்யும் என கூறவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற விழாவில் கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை என்ற நூலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு பட்டமே கலைஞர் வழங்கியதுதான். வைரமுத்து எழுதிய 15 நூல்களை வெளியிட்ட கைகள் கலைஞரின் கைகள். கலைஞரின் வரலாற்றை கவிதையாக எழுதித் தர வேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், ‘மகா கவிதை’ தீட்டிய கவிப்பேரரசு வைரமுத்துவை உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார். சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வானிலை மைய அதிகாரிகள் அதிகனமழை பெய்யும் என சொன்னார்களே தவிர, எவ்வளவு மழை பெய்யும் என சொல்லவில்லை. 100 ஆண்டுகள் இல்லாத மழை பெய்தது என்கிறார்கள். ஆனால் அவ்வளவ் மழை பெய்ததற்கான் காரணத்தை யாரும் சொல்லவில்லை. ஏரி உடைந்ததைப் போல வானம் உடைந்து கொட்டியது போல மழை பெய்துள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுசூழலில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள காலநிலை மாற்ற நிர்வாகக் குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் தமிழ்நாட்டை போன்று சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தவில்லை. அண்மையில் ஏற்பட்ட புயல், மழை, வெள்ளம் போன்றவை சூழலியல் பிரச்சனைகள் மீது அதிக கவனத்தை ஈர்க்கின்றன. மனிதன் பூதங்களை தின்ன தொடங்கிவிட்டதால் பூதங்கள் மனிதனை தின்ன் தொடங்கிவிட்டன” என்றார்.

The post கலைஞர் இருந்திருந்தால் மகா கவிதை நூலை எழுதியுள்ள வைரமுத்துவை உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: