சிறுதானிய உணவு கண்காட்சி

 

ராமநாதபுரம், ஜன.1: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவு கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த 29ம் தேதி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் தலைமையேற்று துவக்கி வைத்தார். கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு உணவு பாதுகாப்பு அதிகாரி தர்மர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரேஸ்வரி கலந்துகொண்டு சிறந்த சிறுதானிய உணவை தேர்வு செய்து பாராட்டினார்.

நல்ல ஆரோக்கியமான உணவை சிறுதானியங்கள் கொண்டு தயார் செய்ததோடு, அதனை அனைத்து மாணவர்களுக்கும் விற்பனை செய்து கண்காட்சியை சிறப்பித்திருந்தனர். மேலும், இன்றைய அவசரகால உலகில் மருந்தே உணவாக உட்கொள்ளும் தீய பழக்கம் அதிகமாகி விட்டது. அதற்கு மாறாக, இவ்வகை சிறுதானியங்களால் உணவே மருந்தாக உட்கொள்ளும் நிலையை மாணவர்கள் இதன் வழியாக நன்கு உணர்த்தினர். இதில் கல்லூரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா கண்காட்சியில் கலந்து கொண்டு சிறுதானிய உணவை உட்கொண்டு மாணவர்களை பாராட்டினார்.

செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனையின் மருத்துவர் பாத்திமா சானாஸ் பரூக், மாணவர்கள் தயார் செய்யப்பட்ட சிறுதானிய உணவை கண்டுகளித்தும் பாராட்டினார். மேலும் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். உணவு கண்காட்சி நிகழ்வை வள்ளி விநாயகம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை, ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது மற்றும் மேற்பார்வையாளர் சபியுல்லா செய்திருந்தனர்.

The post சிறுதானிய உணவு கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: