சாயர்புரம் அருகே வெள்ளத்தால் சேதமான வாழைகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஆய்வு

ஏரல்,டிச.31: சாயர்புரம் அருகே உள்ள நடுவக்குறிச்சி மற்றும் புளியநகர் இறைப்புமேடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த 17ம் தேதி பெய்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதன் கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் குளமும் நிறைந்து உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாயர்புரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் நெற்பெயர்கள் அனைத்தும் சேதமாகி விவசாயிகளுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தியது.சாயர்புரம் அருகே உள்ள நடுவக்குறிச்சி மற்றும் புளியநகர் இறைப்பு மேடு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. இந்த வாழை தோட்டங்களை வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் நேரில் பார்வையிட்டார். அவருடன் சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அறவாழி, மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன் ஊடக பிரிவு முத்து மணி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர் உட்பட பலர் இருந்தனர்.

The post சாயர்புரம் அருகே வெள்ளத்தால் சேதமான வாழைகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: