அம்மாபேட்டையில் காவிரி ஆற்றில் மீன்வளத்தை அதிகரிக்க 75 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது

 

பவானி,டிச.30: தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி அம்மாபேட்டை காவிரி ஆற்றங்கரை சொக்கநாதர் கோயில் படித்துறையில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.

பவானிசாகர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கதிரேசன், ஈரோடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் கொளஞ்சிநாதன் மற்றும் அம்மாபேட்டை கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் கட்லா, ரோகு, மிருகால், சேல் கெண்டை மற்றும் கல்பாசு உள்ளிட்ட 75 ஆயிரம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அம்மாபேட்டை மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணன், சின்னண்ணன் மற்றும் சங்க உறுப்பினர்கள் மீன்வளத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அம்மாபேட்டையில் காவிரி ஆற்றில் மீன்வளத்தை அதிகரிக்க 75 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: