என்சிசி., மாணவர்கள் நடைபயணம்

 

ஊட்டி,டிச.29: கூடலூர் அருகே தாளூரில் நடைபெற்று வரும் என்சிசி., பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  நீலகிரி மாவட்ட 31வது என்சிசி., அமைப்பின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி என்சிசி., மாணவ, மாணவியர்களுக்கான கூட்டு பயிற்சி முகாம் கூடலூர் அருகே தாளூர் நீலகிரி கல்லூரியில் கடந்த 23ம் தேதி துவங்கியது. கமாண்டர் கர்னல் சந்தோஷ் தலைமையில் இப்பயிற்சி முகாம் வரும் 1ம் தேதி வரை நடக்கிறது.

இதில் ஊட்டி, அரசு கல்லூரி,ஊட்டி சிஎஸ்ஐ., பொறியியல் கல்லூரி மற்றும் நஞ்சநாடு, எடக்காடு, மஞ்சூர், தேவர்சோலை அரசு மேல்நிலை பள்ளிகள், ஊட்டி சிஎஸ்ஐ., சிஎம்எம்., பள்ளி, ஜோசப் பள்ளி, சாம்ராஜ் பள்ளி, குன்னூர் புனித அந்தோனியார் பள்ளி, ஏகலைவா பழங்குடியினர் பள்ளி, என்எஸ்.,ஐய்யா, கூடலூர் மார்னிங் ஸ்டார், அய்யன்கொல்லி புனித தாமஸ் பள்ளி மற்றும் மேட்டுபாளையம் எஸ்விஜிவி., ஆகிய 12 பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட என்சிசி., மாணவ, மாணவிகள் பங்கேற்று உள்ளனர்.

மாணவ, மாணவியர்களுக்கு துப்பாக்கிகளை கையாளுதல் பயிற்சி அளிக்கப்பட்டது. ராணுவ நடைபயிற்சி, வரைபடங்கள் மூலம் இடங்களை கண்டறிதல், யோகா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நடை பயணம் மேற்கொண்டனர்.என்சிசி அலுவலர்கள் சுப்பிரமணியன், ராஜு, ஜாய் தாமஸ், சீனிவாசன், ரேவதி, காமராஜ், புண்ணியமூர்த்தி, பிரிட்டோ, சந்திரசேகர், விஜய்ஆனந்த் ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

The post என்சிசி., மாணவர்கள் நடைபயணம் appeared first on Dinakaran.

Related Stories: