மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக முகப்பில் ஏர் கலப்பை மாட்டுடன் கூடிய விவசாயி சிலை வைக்க வேண்டும்

சீர்காழி,டிச.28: மயிலாடுதுறை மாவட்டம் 2020 ஆண்டு டிசம்பர் மாதம் 28ம்தேதி 38வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது தற்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூங்கில் தோட்டம் எனும் பகுதியில் புதியதாக 114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்படும் நிலையில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டமானது விவசாயம் பிரதான தொழிலாக கொண்ட மாவட்ட மாகும், உணவு உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல் போன்ற தொழில்களை கொண்டு, வெளிமாநிலங்கள் மற்றும் உலக நாடுகள் வரை உணவு ஏற்றுமதி செய்துவரக்கூடிய மாவட்டமாகவும் விளங்குகிறது.

எனவே விவசாயிகளையும் விவசாயத்தின் பெருமைகளையும் பெருமைப்படுத்தக்கூடிய வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதியதாக அமையவுள்ள மாவட்ட கலெக்டர் வளாகத்தில் ஏர்கலப்பை மாட்டுடன் கூடிய விவசாயி சிலையை நிறுவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ராஜேஷ் கடந்த 22ம்தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி உள்ளார். அதில் டெல்டா விவசாயிகள் பெருமைகளை பறைசாற்றிடும் வகையில் ஏர் கலப்பை மாடு விவசாயி சிலையை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக முகப்பில் ஏர் கலப்பை மாட்டுடன் கூடிய விவசாயி சிலை வைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: