பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடம் வாய்ப்புத் தொகை ரசீதுகள் பெற்று 18 வயது நிரம்பிய நிலையில் உள்ள பயனாளிகள், முதிர்வு தொகை பெறுவதற்கு தங்களை சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல அலுவலர்களிடம் கீழ்க்காணும் ஆவணங்களை அளித்து இத்திட்டத்தின் பணப்பயன்களை பெறலாம்.

முதிர்வுத் தொகை பெறுவதற்கு சேமிப்பு பத்திரத்தின் அசல் மற்றும் நகல், 10ம் வகுப்பு படித்ததற்கான மதிப்பெண் பட்டியல், தாய், மகள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் கையொப்பத்துடன், ஒரு ரூபாய்க்கான அஞ்சல் வில்லை, வங்கி கணக்கு எண் விவரம் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களை அளிக்க வேண்டும். மேலும் விவரங்களை, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், 2வது தளம், திருவள்ளூர் என்ற முகவரியிலும், 044 – 29896049 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: