மேலும் 6 பேருக்கு ஜேஎன்.1 கொரோனா தொற்று

புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக மேலும் 6 பேருக்கு ஜேஎன்-1 வகை கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயரவில்லை.

இதனிடையே ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது 4170 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் கர்நாடகா மாநிலத்தில் தொற்று பாதித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மேலும் 6 பேருக்கு ஜேஎன்.1 கொரோனா தொற்று appeared first on Dinakaran.

Related Stories: