நடப்பாண்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட 100 பாகிஸ்தான் ட்ரோன்கள்: பஞ்சாப் எல்லை பாதுகாப்பு படை தகவல்

பஞ்சாப்: நடப்பாண்டில் இதுவரை மட்டும் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த 100 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தி இருப்பதாக பஞ்சாப் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்திருக்கிறது. நடப்பாண்டில் 12 மாதங்களாகவே, பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஆளில்லா விமானங்கள் அத்துமீறி நுழைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள் இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்; நடப்பாண்டில் இதுவரை மட்டும் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த 100 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தி இருப்பதாக பஞ்சாப் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்திய எல்லைக்குள் போதைப் பொருட்கள், ஆயுதங்கள், வெடி மருந்துகளை கடத்த பாகிஸ்தான் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும் பதிவிடப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள், போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டெடுப்பதை தவிர ட்ரோன்கள் மூலம் கடத்தலை எளிதாக்கும் கடத்தல்காரர்களையும் எல்லை பாதுகாப்புப்படை கைது செய்திருக்கிறது.

 

The post நடப்பாண்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட 100 பாகிஸ்தான் ட்ரோன்கள்: பஞ்சாப் எல்லை பாதுகாப்பு படை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: