சதுரகிரி மலையில் இருந்து ஊருக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்

வத்திராயிருப்பு, டிச.25: சதுரகிரி மலையில் இருந்து ஊருக்குள் புகுந்து பொதுமக்களை குரங்குகள் அச்சுறுத்துகின்றன. குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு சதுரகிரி மலைப் பகுதியில் அதிகளவு குரங்குகள் காணப்படுகின்றது. குறிப்பாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் அடிவார பகுதியான தாணிப்பாறை பகுதியில் குரங்குகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த நிலையில் சதுரகிரி மலை அருகிலேயே உள்ள தம்பிபட்டி, மகாராஜபுரம் கிராமத்திற்குள் தற்போது குரங்குகள் படையெடுக்க துவங்கியுள்ளது.

தம்பிபட்டி ஊருக்குள் வரும் குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்துவதோடு கடைகள், வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை சாப்பிட்டு விட்டு செல்கிறது. நேற்று தம்பிபட்டி ஊருக்குள் புகுந்த 2 குரங்குகள் வயர்கள் மீது நடந்து சென்றது. மேலும் பொது மக்களையும் அச்சுறுத்தியது. உடனே தம்பிபட்டி, மகாராஜபுரம் பகுதிக்குள் சுற்றி திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சதுரகிரி மலையில் இருந்து ஊருக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: