மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் பரவும் பச்சை நிற படலம்

*காவிரி கரையோரத்தில் கடும் துர்நாற்றம்

மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில், பச்சைநிற படலம் உருவாகி வருவதால், பண்ணவாடி, மாசிலாபாளையம் பகுதிகளில் காவிரி கரையோரத்தில் தண்ணீர் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரியும் போது, காவிரியின் இருகரைகளிலும் விவசாயிகள் உழுது, பயிரிடுவது வழக்கமாகும். தற்போது நீர்மட்டம் குறைந்ததால், விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிர்களுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

மழைக்காலங்களில் விவசாயிகள் பயன்படுத்திய ரசாயனங்கள் காவிரியில் கலக்கிறது. அவ்வாறு கலந்த ரசாயனங்கள் மற்றும் அழுகிய தாவரங்கள், சூரிய ஒளியால் ரசாயன மாற்றமடைந்து நீரில் மிதக்கின்றன. இதனால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி, மாசிலாபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரங்களில், தண்ணீர் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக, கரையோரத்தில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மிதக்கும் பச்சை நிற படலத்தை போக்க, திறனூட்டப்பட்ட நுண்ணுயிரி கலவையை தெளிக்க வேண்டும் என்று, காவிரி கரையோர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் பரவும் பச்சை நிற படலம் appeared first on Dinakaran.

Related Stories: