சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு டெல்லி முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பைக் பேரணி: தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் தகவல்

சென்னை: தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் மீனாகுமாரி கூறியதாவது: 7வது சித்த மருத்துவ தினம் வரும் 30ம் தேதி மதுரை தல்லாகுளம் ராஜா முத்தையா மன்றத்தில் கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சியில் ஒன்றிய ஆயுஷ் அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகள், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மேலும், டெல்லியிலிருந்து கன்னியாகுமரி வரை சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன பேரணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு டெல்லி முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பைக் பேரணி: தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: