டிரைவர் இல்லாத காரை அனுமதித்தால் 80 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும்: ஒன்றிய அமைச்சர் பேட்டி

புதுடெல்லி: இந்தியாவில் டிரைவர் இல்லாத காருக்கு அனுமதியில்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தொழிற்சாலையைத் திறப்பதற்கான சூழல் குறித்து பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ‘இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கால் பதிப்பதை வரவேற்கிறோம். அதேநேரம் சீனாவில் காரை உற்பத்தி செய்து இந்தியாவில் விற்பனை செய்வதற்கு சாத்தியமில்லை.

இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்நிறுவனம் கால்பதிப்பதை ஏற்க தயாராக உள்ளோம். இந்தியாவில் ஓட்டுநர் இல்லாத கார்களை அனுமதிக்க மாட்டோம். அதுபோன்ற வாகனங்களை அனுமதித்தால் 80 லட்சம் ஓட்டுனர்கள் வேலையிழப்பார்கள். இதுபோன்ற வாகனங்கள் சிறிய மக்கள்தொகை கொண்ட நாடுகளுக்கு மட்டுமே பொருத்தமானவை’ என்றார்.

The post டிரைவர் இல்லாத காரை அனுமதித்தால் 80 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும்: ஒன்றிய அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: