பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்

 

திருச்சி.டிச.19: பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி மக்கள் குறை தீர் கூட்டத்தில் மன அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெரியசூரியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் திருவெறும்பூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பெரிய சூரியூர் கிராமத்தில் ஜனவரி மாதம் 16ம் தேதி நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிகட்டு போட்டியும் நடத்துவது வழக்கம். எனவே இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். கிராம முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அபிராமியிடம் மனு அளித்தனர்.

The post பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: