திருச்சேறை அத்திமர பஞ்சமுக ஈஸ்வரருக்கு மகா அபிஷேகம்

கும்பகோணம், டிச.17: கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை கடன் நிவர்த்தி ஸ்தலம் வடபாகத்தில் அத்திமர பஞ்சமுக ஈஸ்வர ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இன விமோசனயாக அறக்கட்டளை சார்பில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு கடன் நிவர்த்தி யாகம் நடைபெற்று எந்திரத்துடன் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை கணபதி யாகம், சுப்பிரமணியருக்கு சத்துரு சம்ஹார யாகம், திரிசதி ருத்ர யாகம், மகாயாகம் என தொடர்ந்து நடைபெற்றது.

பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை மனதில் நினைத்து ஹோம குண்டத்தில் மூலிகை பொருட்களை நேரடியாக செலுத்தினர். அத்திமர பஞ்சமுக லிங்கேஸ்வரருக்கு பக்தர்களே சாம்பிராணி தைலம் நேரடியாக தேய்த்து பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து கடங்கள் புறப்பாடு, 16 வகையான திரவிய அபிஷேகங்கள், புனித நீர் கட அபிஷேகமும், மகா தீபாராதனை, கூட்டுவழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post திருச்சேறை அத்திமர பஞ்சமுக ஈஸ்வரருக்கு மகா அபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: