உ.பி. பெண் நீதிபதிக்கு பாலியல் கொடுமை;  என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதியுங்கள்!: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம்

லக்னோ: உ.பி. பெண் நீதிபதி ஒருவருக்கு பாலியல் கொடுமையால், அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதியுங்கள் என்று தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘சாமானிய மக்களுக்கு நீதி வழங்க விரும்புகிறேன். அந்த நீதியை வழங்குவதற்கு, கதவுகளின் வழியாக செல்ல வேண்டியுள்ளது.

பாலியல் துன்புறுத்தலுடன் என்னால் வாழ முடியாது. திறந்த நீதிமன்றத்தில் நீதிபதி நாற்காலியில் அமர்ந்து இருந்த போது அவரால் (மாவட்ட நீதிபதி) பலமுறை அவமானப்படுத்தப்பட்டேன். நீதிமன்றத்தில் இருப்பவர்கள் என்னை தீயசக்தியாக பார்க்கின்றனர். குப்பை போலவும் பார்க்கிறார்கள். பணியிடங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் என்பது ஒரு பெரிய பொய். இந்தியாவில் பணிபுரியும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் உட்பட யாரும் எனது குரலை கேட்கமாட்டார்கள், எல்லாரும் என்னைத் தற்கொலைக்குத் தள்ளுவார்கள்.

மாவட்ட நீதிபதி இருக்கும் ஒருவர், என்னை அவரது வீட்டிற்கு இரவு வரச் சொல்கிறார். பாலியல் சுரண்டல்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக 2022ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் இறப்பதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த கடித விவகாரம் உத்தரபிரதேசம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது மேற்கண்ட கடிதம் வைரலாகி வருவதால், உத்தரபிரதேச ஐகோர்ட்டிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

The post உ.பி. பெண் நீதிபதிக்கு பாலியல் கொடுமை;  என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதியுங்கள்!: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: