மானாமதுரை, டிச.11:மானாமதுைர அருகே பனிக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த முத்து(60), பிச்சையம்மாள்(45). இவர்கள் இருவரும் நேற்று மாலை பனிக்கனேந்தல் வைகை ஆற்றின் நடுவே ஆடு மேய்த்து கொண்டிருந்த போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருவரும் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆற்றில் இருந்த நாணல் செடிகளை பிடித்து கொண்டு ஆடுகளையும் வைத்துக் கொண்டு உதவி கேட்டு கூச்சலிட்டனர்.
ஆற்றின் கரையில் இதனை பார்த்த கிராமத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் மானாமதுரை தீயணைப்பு துறையினர் ஆற்றில் கயிற்றை கட்டி பத்திரமாக இருவரையும் காப்பாற்றினர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் அவர்கள் மீட்கப்பட்டனர்.
The post ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு appeared first on Dinakaran.
