ராஜராஜன் கல்லூரியில் 700 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

 

காரைக்குடி, டிச.11: காரைக்குடி அருகே ராஜராஜன் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ராஜராஜன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வியியல் கல்லூரி முதல்வர் சிவகுமார் வரவேற்றார். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் தங்கசாமி பட்டங்களை வழங்கினார். விழாவிற்கு தலைமை வகித்து முன்னாள் துணைவேந்தர், கல்விகுழும ஆலோசகர் பேராசிரியர் முனைவர் சுப்பையா பேசுகையில், இக்கல்லூரி துவங்கப்பட்டு 16 ஆண்டுகளில், மாநில அளலான தேர்வில் 16 தங்க பத்தங்களை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அதிக முதல் மார்க் பெற்று தங்கபதக்கம் பெற்றவர்கள் என பெருமை இக்கல்லூரிக்கு உள்ளது. நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயன்படக் கூடியவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று சொல்லி தரவேண்டும். உடல், மனம், அறிவு, சமுதாய ரீதியாக மிகச்சிறந்தவர்களை உருவாக்குவது தான் கல்வியின் நோக்கம். கோபம் உள்பட பல்வேறு உணர்ச்சிகளை கட்டுப்படுத்துபவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும். வாழ்க்கை என்றால் தோல்வியும், வெற்றியும் கலந்துதான் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். மார்க் எடுக்க வைப்பது மட்டுமே நமது கடமை அல்ல. சமுதாயத்தோடு ஒத்துப்போக கூடிய மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றார்.
பொறியியல் கல்லூரி முதல்வர் இளங்கோ நன்றி கூறினார். 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.

The post ராஜராஜன் கல்லூரியில் 700 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: