அரூர், டிச.11: அரூர் பகுதியில் குட்கா பதுக்கி விற்ற 4 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. அரூர் பகுதியில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா மேற்பார்வையில், அரூர் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி, எஸ்ஐ தருமன் மற்றும் போலீசார் தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, ஆண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் பேக்கரி, ஓட்டல், மளிகை, பெட்டிக்கடைகள் உள்பட 20க்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். இதில், குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post குட்கா பதுக்கி விற்ற 4 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.
