கோடாலி கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்

 

தா.பழூர்,டிச.9: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் அரியலூர் மண்டல இணை இயக்குநர் ஹமீது அலி தலைமையிலும், உடையார்பாளையம் உதவி இயக்குனர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாம் வடவார் தலைப்பு கால்நடை மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.

இந்த முகாமில் வடவார் தலைப்பு கால்நடை உதவி மருத்துவர் அபிநயா, கோடாலி கருப்பூர் கால்நடை உதவி மருத்துவர் வாசுகி, வடவார் தலைப்பு கால்நடை பராமரிப்பு உதவியாளர் மகாலட்சுமி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடுதல், சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்த முகாமில் 400 பசு மாடுகள், 700 வெள்ளாடுகள், 195 கோழிகளும் பயன் பெற்றன. இதில் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி, ஆடுகளுக்கு ஆட்டகொல்லி தடுப்பூசி, கோழி கழிச்சல் தடுப்பூசி. வெறிநாய் தடுப்பூசி உள்ளிட்டவை போடப்பட்டது. இந்த முகாமில் 10 மாடுகளுக்கு சினை ஊசி , 515 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 40 கால்நடைகளுக்கு சினை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் நடைபெற்ற கன்று பேரணியில் சிறந்த 6 கிடேரி கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

The post கோடாலி கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: