இந்திய துணைகண்டத்திற்கு வழிகாட்டும் வகையில் சிறந்த விளையாட்டு வீரர்களை அமைச்சர் உதயநிதி உருவாக்குகிறார்: முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேச்சு

 

காரைக்குடி, டிச.8: காரைக்குடியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் திமுக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்கள், பெண்களுக்கான மாநில அளவிலான மின்னொளி கைபந்து போட்டி துவக்கவிழா நடந்தது. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன் வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோர் வாழ்த்தினர்.

நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்து பேசுகையில், இந்திய துணை கண்டத்திற்கு வழிகாட்டும் அளவில் விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் உருவாக்கும் பணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார் என்றார்.

நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் துரைநாகராஜன், ஹரிதாஸ்துரைராஜ், கோபாலகண்ணன், அதியமான், நாகராஜ், பிரவீன்குமார், கமல்ராஜ், அய்யப்பன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணைத் தலைவர் காரைசுரேஷ், நகர அவைத்தலைவர் சன்சுப்பையா, நகர துணைச்செயலாளர் லட்சுமி, திமுக நிர்வாகிகள் சேவியர், சாய்சுரேஷ், தெற்குதெரு கார்த்தி, ஜெபதுரை, கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இந்திய துணைகண்டத்திற்கு வழிகாட்டும் வகையில் சிறந்த விளையாட்டு வீரர்களை அமைச்சர் உதயநிதி உருவாக்குகிறார்: முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: