தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் கொடிநாள் நிதி வசூல்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

 

தாம்பரம்: நமது தாய் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி படைவீரர் கொடி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னாள் படைவீரர் நலத்துறை, உயிரிழந்த படைவீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகவும், மாற்றுத்திறன்கொண்ட படை வீரர்களின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்டவற்றுக்கும் தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

படை வீரர்கள் கொடி நாள் நிதியிலிருந்து இந்த உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொடி நாள் விழாவினையொட்டி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல அலுவலர் / கண்காணிப்பாளர் மற்றும் உதவி இயக்குநர் ரமேஷ், நல அமைப்பாளர் கவுரவ கேப்டன் பாண்டியராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் கொடிநாள் நிதி வசூல்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: