பாலின பாகுபாடு மனித குலத்துக்கு எதிரான குற்றம்: நோபல் பரிசு பெற்ற மலாலா பேச்சு

ஜோகன்ஸ்பர்க்: பாலின பாகுபாட்டை மனித குலத்துக்கு எதிரான குற்றமாக்க வேண்டும் என சர்வதேச சமூகத்துக்கு சமூக ஆர்வலர் மலாலா யூசுப்ஸாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். நெல்சன் மண்டேலா வருடாந்திர சொற்பொழிவு ஜோகன்ஸ்பர்க்கில் நடந்தது. இதில் பேசிய நோபல் பரிசு பெற்றவரும், சமூக ஆர்வலருமான மலாலா யூசுப்சாஸாய், ‘‘ தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள்,கறுப்பர்களை பிரிப்பது இயற்கையான முறையில் நடந்ததாக நம்பியதை போல, ஆப்கானிஸ்தானில், பெண்களை ஒடுக்குவது மத விஷயம் என தலிபான்கள் கூறுகின்றனர்.

இதை ஒரு சாக்காக வைத்து அவர்கள் பேசுகின்றனர். அது உண்மை அல்ல. பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தலிபான்களின் கட்டளைகளை நாம் ஏற்றுகொண்டால் அவர்கள் மனிதர்களை விட தகுதி குறைந்தவர்கள், அவர்களுடைய உரிமைகள் விவாதத்திற்கு உட்பட்டது என்ற மாயை உருவாக்கப்படுகிறது.தலிபான்களின் கட்டுப்பாடுகள் கறுப்பு இனத்தினருக்கு எதிரான நிறவெறியை போன்றது.

நிறவெறி குற்றமாக்கப்பட வேண்டும் என்பதற்காக தென்னாப்பிரிக்கர்கள் போராடினார்கள். நிறவெறியின் கொடூரங்களுக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தனர். ஆனால் பாலின நிறவெறி இன்னும் குறியிடப்படவில்லை.எனவே பாலின நிறவெறி மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என ஒவ்வொரு நாடுகளும் அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

The post பாலின பாகுபாடு மனித குலத்துக்கு எதிரான குற்றம்: நோபல் பரிசு பெற்ற மலாலா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: