நிலக்கோட்டை, டிச. 3: தொடர் மழை காரணமாக நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வந்தி பூக்கள் அதிகம் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிலக்கோட்டை தென் தமிழகத்தில் பூக்களில் சென்ட் என அழைக்கப்படும் பகுதியாகும், இப்பகுதியில் மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, வாடாமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட வறட்சியை தாங்கி மழைக்காலங்களில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியாக பெய்து வருவதால் செண்டு மல்லி, வாடா மல்லி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பூக்கள் தோட்டங்களில் தற்போது பூத்துக்குலுங்குகிறது. கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் ஐயப்பன், முருக பக்தர்கள் பலரும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் செவ்வந்திப்பூக்கள் அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
The post தொடர்மழை காரணமாக பூத்துக் குலுங்கும் செவ்வந்தி பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.
