5ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வலங்கைமானில் நடக்கிறது

 

திருவாரூர், டிச. 2: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தீன்தயாள் உபாத்யாய கௌசல்ய கிராமின் யோஜனா திட்டத்தில் ஊரக பகுதிகளில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் இளைஞர்களுக்கு தேவையான திறன் பயிற்சிகளும் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.

அதன்படி 2023- 24ம் நிதியாண்டில் இதுவரை 2 இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது 3வது இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம் வலங்கைமான் வட்டாரத்தில் தொழுவூர் அரசு தொழில்நுட்ப கல்லுரியில் டிச. 5ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களும், தனியார் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொள்ளவுள்ளதால் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த ஆண்,பெண் இருபாலரும் இம்முகாமில் பங்கேற்று தனியார் நிறுவனங்களில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

The post 5ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வலங்கைமானில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: