முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் கட்-ஆப் மதிப்பெண் குறைப்பால் லாபம் பெறும் தனியார் கல்லூரிகள்

துநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள், நீட் கட்-ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில், முதுநிலை படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தின் காரணமாக பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் சேர்கின்ற நிலை இருக்கிறது. இருப்பினும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் குறைவான கட்-ஆப் மதிப்பெண்கள் எடுக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டின் பேரில் தனியார் கல்லூரிகளில் பணம் கொடுத்து சேர்கின்ற நிலை உள்ளது.

இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டில் பொதுப் பிரிவினருக்கு 291, எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 257, மாற்றுத் திறனாளிகள் பொதுப் பிரிவினருக்கு 274 என்று கட்-ஆப் மதிப்பெண்கள் வைக்கப்பட்டன. அரசுக் கல்லூரிகளில் நிறைய காலியிடங்கள் ஏற்பட்டதை அடுத்து கட்-ஆப் மதிப்பெண் பூஜ்ஜிய நிலைக்கும் தள்ளப்பட்டது. இதுபோல கட்-ஆப் மதிப்பெண்களை குறைப்பதால் அது மாணவர்களுக்கு பயன்கொடுக்குமா என்றால், மாணவர்களை விட தனியார் கல்லூரிகளுக்கே பயன் தருவதாக இருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த மாணவ, மாணவியர் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 70 சதவீத இடங்கள், கட்-ஆப் மதிப்பெண் குறைத்த பிறகும், தகுதி பெற்ற மாணவர்களால் நிரப்பப்பட்டுள்ளன என்பதும், அந்த மாணவர்கள் மிகப்பெரிய பயன்பெற்றுள்ளனர் என்பதும் வெளிப்படையாக இப்போது தெரியவந்துள்ளது. புகுமுக மற்றும் துணை மருத்துவ ஆய்வுப்படிப்புகளுக்கு அதிக தேவை இருந்தும் தனியார் கல்லூரிகளில் முதல் கட்-ஆப் மதிப்பெண்களுக்கு பிறகு அதிக எண்ணிக்கையில் மருத்துவ இடங்கள் காலியாக உள்ளனவா என்பதை குறிப்பிடவில்லை.

முதல் கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு பிறகு காலியாக இருக்கும் 80% அரசு ஒதுக்கீட்டு இடங்களும் புகுமுக மற்றும் துணை மருத்துவ ஆய்வுப் படிப்புகளில் உள்ளன. மேலும் இவை பெரும்பாலும் குறைந்த கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றவர்களால் நிரப்பப்படுகின்றன. தனியார் கல்லூரிகளில் கடந்த 2020ம் ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்புகளில் குறைந்த கட்-ஆப் மதிப்பெண்களில் 67 சதவீதம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 2021ல் 68 சதவீதம் பேரும், 2022ல் 79 சதவீதம் பேரும் ஆய்வுப் படிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2020ல் ஆய்வுப் படிப்புக்கான இடங்களில் 12 சதவீதம் பேர்தான் சேர்ந்துள்ளனர். 2021ல் 15 சதவீதம், 2022ல் 23 சதவீதம் பேர்தான் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ ஆய்வுப்படிப்புகளுக்கான தேவை அதிகம் இருந்தும், கட்டணம் குறைவாக இருந்தும், மாணவர்களுக்கு வழக்கமான உதவித்தொகை வழங்கியும், அரசு மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகத்தினர் ஆய்வுப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்கின்ற சவால்களை எதிர்கொள்ள விரும்பவில்லை. இருப்பினும், தனியார் கல்லூரிகளில் மருத்துவ ஆய்வுப் படிப்பு இடங்களுக்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தாலும் (சில சமயங்களில் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் வரை) தனியார் கல்லூரிகள் தங்களுக்கான மாணவர்களில் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று, அதேநேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த முடிகின்ற மாணவர்களை கண்டுபிடிப்பதில் திணறுகின்றன. அதனால் கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக, அவை கட்-ஆப் குறைப்பை வரவேற்கின்றன.

மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வசதியுள்ள மாணவர்களை கண்டறியும் வேலைகளிலும் தனியார் கல்லூரிகள் இறங்குகின்றன. தனியார் கல்லூரிகளில் போதிய இடங்கள் சேர்க்கை நடக்காவிட்டால் அவர்களின் நிதிநிலை குறித்தான தாக்கம் எப்படி இருக்கும்? ஒரு ஆண்டுக்கு ஆய்வுப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் ரூ.300 கோடி வரை இருக்கும். ஆய்வு அல்லாத 3 ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு ரூ.1000 கோடி வரை கிடைக்கும்.  ஒவ்வொரு ஆண்டும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படும் விவரங்களை அனுப்ப வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் சிறப்பு கல்லூரிகள், என்.எம்.சி சிலவற்றைக் கேட்டுக்கொண்ட நிலையில், பெரும்பாலான கல்லூரிகள் அவற்றை அனுப்பி வைத்தன.

எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் மற்றும் சண்டிகரில் உள்ள பிஜிஐ ஆகியவற்றில் இருந்து சுமார் 2,675 முதுகலை இடங்களுக்கான தரவுகள் வரவில்லை என்ற குறையுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்களை குறைத்தாலும் 2020-21ல் மொத்தம் 4,614 முதுகலை இடங்களும், 2021-22ல் 3,744, 2022-23ல் 4,400 இடங்களும் காலியாக இருப்பதாக ஒன்றிய அரசு கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், இதில் எத்தனை இடங்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ளன, எந்தெந்த ஸ்பெஷல் இடங்கள் உள்ளன என்பதை வெளியிடவில்லை.

பெரும்பாலான காலியிடங்கள் மருத்துவம் அல்லாத பாடங்களில் இருப்பதாகவும், இதனால் மருத்துவம் செய்யத் தொடங்கும் பெரும்பாலான மாணவர்கள் பயிற்சியில்லாத மருத்துவர்களாக மாற தயாராக இல்லை என்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் பல செய்தி அறிக்கைகளில் மேற்கோள் காட்டியுள்ளனர். கடந்த 2020ம் ஆண்டில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவியர் முதுநிலை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் சுமார் 96 ஆயிரம் பேர் முதல் கட்-ஆப் மதிப்பெண்களுக்கு பிறகு சுமார் 35 ஆயிரம் இடங்களில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவற்றில், 85% (கிட்டத்தட்ட 30 ஆயிரம்) மருத்துவ இடங்கள். இவற்றில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் அரசு கல்லூரிகளில் உள்ளன. மருத்துவ இடங்களுக்கு அதிக தேவை இருந்தபோதிலும், சுமார் 13 ஆயிரம் மருத்துவ இடங்களைக் கொண்ட தனியார் கல்லூரிகளில் கட்-ஆப் குறைக்கப்படுவதற்கு முன்பு 1,750 இடங்களுக்கு மேல் நிரப்ப முடியவில்லை. இந்தநிலையை 2023-24 கல்வி ஆண்டு சேர்க்கையில் காணமுடிந்தது. எனவே, காலியாக உள்ள இடங்களை நிரப்பும் முயற்சியில் இறங்கிய அரசுக் கல்லூரிகள் கட்-ஆப்பை பூஜ்ஜிய சதவீதமாக மீண்டும் குறைத்தது.

இதேநிலை மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே கட்-ஆப் மதிப்பெண்களை குறைக்கும் திட்டம் என்பது தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக இருக்குமே தவிர, அரசுக் கல்லூரிகளுக்கு பயன்தருமா என்பதை தெரிந்துகொள்ள காத்திருக்க வேண்டும். தனியார் கல்லூரிகள் முக்கியமாக பணக்காரர்களைத்தான் சேர்க்கின்றன. அவை ஆண்டுக்கு ரூ.80 லட்சம் கட்டணம் என்பதை குறைத்தாலும், சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை தேர்வு செய்யலாம். அதற்கு பதிலாக தனியார் கல்லூரிகள், குறைந்த கட்-ஆப் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை குறிவைத்து விளம்பரம் செய்து சேர்க்கை நடத்துகின்றன. அதனால் அந்த கல்லூரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

* கட்-ஆப் குறைப்புக்கு பின் சேர்க்கை முதுநிலை படிப்புக்கான நீட் கட்-ஆப் மதிப்பெண்களால் நிரம்பாத இடங்களை பொறுத்தவரையில், கடந்த 2020ம் ஆண்டில், முதல் கட்-ஆப் மதிப்பெண்களுக்கு பிறகு குறைக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்களுடன் சேர்க்கை நடந்த போது, 2518 இடங்களில் அரசுக் கல்லூரிகளில் 761 இடங்கள் ஒதுக்கப்பட்டு அதில் 93 பேர் தான் ஆய்வு படிப்பில் சேர்ந்தனர். தனியார் கல்லூரிகளில் 1757 இடங்களில் 1171 பேர் ஆய்வு படிப்பில் சேர்ந்தனர்.

* கடந்த 2021ம் ஆண்டில் மொத்த இடங்கள் 2335ல் அரசுக் கல்லூரிகளுக்கு 659 இடங்கள் ஒதுக்கப்பட்டு அதில் 98 பேர் ஆய்வு படிப்பில் சேர்ந்தனர். தனியார் கல்லூரிகளுக்கு 1676 இடங்கள் ஒதுக்கப்பட்டு அதில் 1136 பேர் சேர்ந்தனர்.

* 2022ம் ஆண்டில் மொத்த இடங்கள் 4913, அவற்றில் அரசுக் கல்லூரிகளுக்கு 1473 இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றில் 332 பேர் சேர்ந்தனர். தனியார் கல்லூரிகளுக்கு 2440 இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றில் 2722 பேர் சேர்ந்தனர்.

* பெயரளவில் உதவித்தொகை
பல தனியார் கல்லூரிகள் மருத்துவம் அல்லாத பாடங்களுக்கு பூஜ்ஜியக் கட்டணம் அல்லது மிகக் குறைந்த கட்டணங்களைக் வைத்துள்ளன. மேலும் பல மருத்துவர்களுக்கு எந்த உதவித்தொகையையும் கொடுப்பதில்லை அல்லது மருத்துவம் அல்லாத இடங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு பெயரளவிலான உதவித்தொகையை மட்டுமே வழங்குகின்றன.

The post முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் கட்-ஆப் மதிப்பெண் குறைப்பால் லாபம் பெறும் தனியார் கல்லூரிகள் appeared first on Dinakaran.

Related Stories: