தனியார் விற்பனை நிலையங்களில் விதிகளை மீறியதாக 17.26 டன் விதை விற்பனைக்கு தடை

தஞ்சாவூர் டிச.1: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, திருவோணம் வட்டாரங்கள், தஞ்சாவூர் கொடிமரத்து மூலை, திருக்கானூர்பட்டி, மேலஉளூர், தென்னமநாடு, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி, விதை ஆய்வாளர்கள் சுரேஷ், சத்யா, நவீன் சேவியர், பாலையன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், விதை சட்ட விதிகளை மீறியதாக தனியார் விதை விற்பனை நிலையங்களில் ரூ.19.23 லட்சம் மதிப்புள்ள 17.26 டன் அளவு கொண்ட விதை நெல், உளுந்து, நிலக்கடலை, மக்காச்சோளம் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, விதை விற்பனை உரிமங்கள் பெற்ற தனியார் விதை விற்பனையாளர்கள் விதை சட்ட விதிகளைப் பின்பற்றி, தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும். மீறுவோர் மீது விதை சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தனியார் விற்பனை நிலையங்களில் விதிகளை மீறியதாக 17.26 டன் விதை விற்பனைக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: