தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழு வருகை வேலை வாங்கி தருவதாக மோசடி: எஸ்பியிடம் மனு

நாகப்பட்டினம்,டிச.1: நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி தைக்கால் தெருவை சேர்ந்த பத்மாஈஸ்வரி என்பவர் தலைமையில் 13 பேர் நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகம் வந்தனர்.

அவர்கள் எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
பத்மா ஈஸ்வரியின் கணவர் ரஞ்சித் மற்றும் எனது உறவினர்கள், நண்பர்கள் என 13 பேர் சேர்ந்து வெளிநாட்டிற்கு செல்வதற்காக ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் பணம் மற்றும் பாஸ்போர்ட் கொடுத்துள்ளோம். வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி நாகப்பட்டினம் மாவட்டம் எரவாஞ்சேரியை சேர்ந்த ராமன், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த கணேசன். இவரது உறவினர் சிதம்பரம் உசுப்பூர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஆகியோர் இணைந்து 13 பேரிடம் பணம் மற்றும் பாஸ்போர்ட் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பெற்றனர்.

ஆனால் வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணம் மற்றும் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு தலைமறைவாக உள்ளனர். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆசையில் வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளோம். பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திரும்ப பெற முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே 13 பேரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழு வருகை வேலை வாங்கி தருவதாக மோசடி: எஸ்பியிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: