32,152 கிமீ தூரத்திற்கு தொலைதூர கிராமப்புறங்களில் ரூ.33,822 கோடியில் சாலைகள்: 7,287 கிராமங்களுக்கு 4ஜி சேவை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட தொலைதூர பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் ரூ.33,822 கோடி செலவில் 32,152 கிமீ சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியின கிராமங்கள் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பைப் பெறும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறி உள்ளார். மொத்தம் ரூ.33,822 கோடியில் ஒன்றிய அரசு ரூ.22,978 கோடி செலவிடும். இத்திட்டத்தில் 2,648 நீண்ட பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. மேலும், ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா மற்றும் ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு உட்பட்ட 44 மாவட்டங்களின் 7,287 கிராமங்களுக்கு 4ஜி செல்போன் சேவை வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், இதுவரை சேவை கிடைக்கப்பெறாத கிராமங்களில் 4ஜி செல்போன் சேவை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். புதிதாக செல்போன் டவர்கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.6,466 கோடி செலவிட மதிப்பிடப்பட்டுள்ளது. …

The post 32,152 கிமீ தூரத்திற்கு தொலைதூர கிராமப்புறங்களில் ரூ.33,822 கோடியில் சாலைகள்: 7,287 கிராமங்களுக்கு 4ஜி சேவை appeared first on Dinakaran.

Related Stories: