சமுதாய கூடம் திறப்பு

திருப்புவனம், நவ.30: திருப்புவனம் பெரிய கண்மாய்க்கரையில் அதிகமுடைய அய்யனார் கோயில் உள்ளது. கிராம கோயிலான இங்கு வரும் பக்தர்கள் முடி இறக்குதல், காதணி விழா போன்ற நிகழ்வுகளுக்கு சமுதாய கூடம் அமைக்க வேண்டும் என முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து நமக்கு நாமே திட்டத்தில் பேரூராட்சி நிர்வாக நிதி ரூ.30 லட்சமும், விவசாயிகள் நிதி ரூ.17 லட்சமும் சேர்த்து ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தில் நேற்று யாக பூஜைகள் நடத்தி துவக்கி வைக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், கவுன்சிலர்கள் அயோத்தி, பாரத் ராஜா, வெங்கடேஸ்வரி உடபட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

The post சமுதாய கூடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: