தமிழ்நாட்டில் 25 இடங்களில் நாட்டுப்புற கலைப்பயிற்சி மையம்

சென்னை: கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் 4 வகையான நாட்டுப்புற கலைகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடத்தப்படவுள்ளது. கலைப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை 25 நாட்டுப்புற கலைப்பயிற்சி மையங்களிலும் நாளை (டிசம்பர் 1ம் தேதி) முதல் தொடங்கிடவும், பயிற்சியானது 1.1.2024 முதல் தொடங்கிடவும் துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாட்டுப்புற கலையில் ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள்இந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் 25 இடங்களில் நாட்டுப்புற கலைப்பயிற்சி மையம் appeared first on Dinakaran.

Related Stories: