உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பெருமிதம் மண்டல் கமிஷனை அமல்படுத்த முதல் குரல் கொடுத்தவர் கலைஞர்தான்

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் எவர் கண்ணிலும் நீண்ட நாட்களாக படாத நிலையில் அதை செயல்படுத்த வி.பி.சிங் முடிவு செய்தார். இந்த புரட்சி தென்னிந்தியாவில் பெரியார், கலைஞர் ஆகியோரின் குரலில் இருந்து தொடங்கியது. கலைஞர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல் தொடுத்தவர். தலித் மக்களுக்காக அம்பேத்கர் குரல் கொடுத்தார். அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டார்.

அதன் வெளிப்பாடுதான் மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியது. கலைஞரை போல் அவரது மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். இந்த விஷயத்தில் வி.பி.சிங்குடன் கைகோர்த்து சென்றது தென்னிந்தியாவில் கலைஞர் மட்டுமே. அதனால்தான் மண்டல் கமிஷன் சாத்தியமானது. வி.பி.சிங் எந்த சட்ட சபையில் முதல்வராக பணியாற்றினாரோ அதே இடத்தில் நாங்களும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரியில் அவரது சிலை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டிருப்பது உத்தரபிரதேச மக்களுக்கு ஏன் பீகார், அரியானா என அனைத்து வட மாநில மக்களும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளை தெரிவிப்பார்கள். இந்த வங்க கடல் ஓரத்தில் முதல்வர் படித்த கல்லூரியிலேயே வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங் எந்த மாநிலத்திலிருந்து பிரதமராக வந்தாரோ அதே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய பணியை செய்துள்ளார். இதன் மூலம் வி.பி.சிங்கை பெருமைப்படுத்தியுள்ளார். இதற்காக அவருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த பணி எதிரொலிக்கும். உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

The post உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பெருமிதம் மண்டல் கமிஷனை அமல்படுத்த முதல் குரல் கொடுத்தவர் கலைஞர்தான் appeared first on Dinakaran.

Related Stories: