கார்த்திகை தீபத் திருவிழா பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோயிலில் சிறப்பு வழிபாடு

பெரியகுளம், நவ. 27: பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் மலை மேல் கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும். நேற்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கைலாசநாதர்- பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

நேற்று மாலை சிகர நிகழ்ச்சியாக சரியாக 6.30 மணி அளவில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் முன்பு வைக்கப்பட்டிருந்த அகண்ட விளக்கில் 500 கிலோ எடையுள்ள நெய் ஊற்றப்பட்டது. பின்னர் கோயில் அர்ச்சகர் கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கார்த்திகை தீபத்தை வணங்கி சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

The post கார்த்திகை தீபத் திருவிழா பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: