வாக்காளர் சிறப்பு முகாமை காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு முகாமை, கலெக்டர் கலைச்செல்வி மோகன், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதுமதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

எனவே, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம், திருத்தம் செய்ய, முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர். அதன்படி, நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் குன்றத்தூர் ஒன்றியம், சிக்கராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதுமதி. கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, புதிய வாக்காளர்களின் பதிவு, நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் குறித்தும், விண்ணப்பங்களின் விவரம், பெயர் திருத்தம் குறித்தும் எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன என கேட்டறிந்தனர். ஆய்வின்போது, பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் உடன் இருந்தார்.

The post வாக்காளர் சிறப்பு முகாமை காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: