கறம்பக்குடி, நவ.26: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மயிலங்கன் பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம். விவசாயி இவருக்கு சொந்தமான மாடு நேற்று வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அருகிலுள்ள 50 அடி ஆழ கிணற்றில் மாடு தவறி விழுந்து விட்டது. அருகில் உள்ளவர்கள் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் மணிவண்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்து பரிதவித்து கொண்டிருந்த மாட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். கிணற்றுக்குள் விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்புத்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
The post கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.
