இது குறித்து பால் முகவர்கள் கூறுகையில், தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் பால் கொள்முதல் விலை கனிசமாக குறைந்துள்ளதால் இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹட்சன் நிறுவனத்தின் விலை குறைப்பை தொடர்ந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விற்பனை நிறுத்தப்பட்டால் மக்கள் தனியார் நிறுவன பாலை வாங்கவே அதிகம் வாய்ப்புள்ளது என்றனர்.
The post தனியார் நிறுவன பால் லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: தயிர் விலையிலும் 8 ரூபாய் ‘கட்’ appeared first on Dinakaran.