பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி முகாம்

மதுரை, நவ. 24: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உள்ளுறை பயிற்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் சத்திரபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழில் கல்வி வேளாண் பிரிவில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதுரை வேளாண் கல்லூரியில் 10 நாள் உள்ளுறை பயிற்சி முகாம் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் வீட்டு தோட்டம் அமைத்தல், விதைப்பந்து தயாரித்தல், தொழு உரம் தயாரிப்பு, பூச்சிகளை அழிப்பதற்கான பூச்சிக் கொல்லிகளை இயற்கை முறையில் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களும் பயிற்சியை ஆர்வமுடன் கற்றுக் கொண்டு பேராசிரியர் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் அளித்தனர். மேலும் மாணவர்களின் சந்ேதகங்களுக்கு தோட்டக்கலைத்துறை பேராசிரியர் அருள்அரசு விளக்கமளித்தார். இந்நிகழ்வில் வேளாண் ஆசிரியர் ஜெயபிரகாஷ் நாரயாணன் மற்றும் வேளாண் பயிற்றுநர் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: