ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் இன்று பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்

சென்னை: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த விவேக் குமார் சிங், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சுதீர் குமார் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் இருவரையும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இன்று மாலை 4.45 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்கிறது. காலி பணியிடங்கள் எண்ணிக்கை 9 ஆக குறைகிறது.

1968ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் பிறந்த விவேக் குமார் சிங் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 1969ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பிறந்த மம்மினேனி சுதீர் குமார் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

The post ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் இன்று பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: