திண்டுக்கல்லில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முறை விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல், நவ. 23: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முறை விழிப்புணர்வு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத் துறை துணை இயக்குநர் கவுசல்யா தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை முறை விழிப்புணர்வு முகாம் இரு வார விழா இரு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி நவ.21ம் தேதி முதல் நவ.27ம் தேதி வரை மக்களிடையே விழிப்புணர்வு வாரமாகவும், நவ.28ம் தேதி முதல் டிச.4ம் தேதி வரை சேவை அளித்தல் வாரமாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிகிச்சை முறையில், ஆண்களுக்கு எளிமையான கருத்தடை அறுவை சிகிச்சை, பயிற்சி பெற்ற மருத்துவர்களால் தையல் இல்லாமல், தழும்பு இல்லாமல் ஒரு சில நிமிடங்களில் செய்யப்படுகிறது. மருத்துவமனைகளில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழனி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் தினமும் நடைபெறுகிறது. இம்முகாமில் கலந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு அரசு ஊக்கத் தொகையாக ரூ.1,100ம், அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.200ம் வழங்கப்படுகிறது. மேலும் பயனாளிக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டரின் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5,000ம் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல்லில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முறை விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: