கூடலூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தை சேதப்படுத்திய யானைகள்: 2வது முறையாக மருத்துவ உபகரணங்களை உடைத்து சேதம்

கூடலூர்: கூடலூர் அருகே 2வது முறையாக ஆரம்ப சுகாதார நிலையத்தை உடைத்து மருத்துவ உபகரண பொருட்களை காட்டு யானை சேதப்படுத்தியது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் காட்டு யானைகளின் நடமாட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உணவு தேவைக்காக வனப்பகுதியிலிருந்து வெளியேறி வரும் காட்டு யானைகள் இப்பகுதியில் இருக்கக்கூடிய வீடுகள் மற்றும் மருத்துவமனைகளை உடைப்பது அதிகரித்து வருகிறது. ஓவேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலை 3 யானைகள் வந்துள்ளது. மருத்துவமனையின் ஜன்னல்களை உடைத்து அங்குள்ள மருத்துவ உபகரண பொருட்களை சேதப்படுத்தியது. அதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய பெட்டகங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

தற்போது அந்த 3 யானைகளும் வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் இருப்பதால் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த யானைகள் இரண்டாவது முறையாக சுகாதார நிலையத்தை உடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வனத்துறையிடம் பலமுறை தகவல் தெரிவிக்கப்படும் வனத்துறையினர் மெத்தனம் காட்டுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கூடலூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தை சேதப்படுத்திய யானைகள்: 2வது முறையாக மருத்துவ உபகரணங்களை உடைத்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: