சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு விருது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்

 

கும்பகோணம், நவ.21: கும்பகோணம் அருகே சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு சிறந்த கூட்டுறவு நிறுவனத்திற்கான விருதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், கூட்டுறவு துறை சார்பில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம், அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு நிறுவனத்திற்கான பாராட்டு கேடயத்தை சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வழங்கினார்.

அதனை சங்க செயலாட்சியர் சின்னபொண்ணு, சங்க செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துசெல்வம், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா, பூர்ணிமா, கூட்டுறவு சங்ககளின் மண்டல இணை பதிவாளர் பழனீஸ்வரி, இணை பதிவாளர் பெரியசாமி, துணை பதிவாளர் அப்துல் மஜீத் மற்றும் துணை பதிவாளர்கள், பொதுமேலாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு விருது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: