செங்கல்பட்டு மாவட்ட காங். கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

 

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆர்டிஐ பிரிவு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆர்டிஐ பிரிவு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஆர்டிஐ மாநில துணைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ராஜநிதி முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ஆர்டிஐ நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், மதுராந்தகம் அம்பேத்கர் சிலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆர்டிஐ மாநில தலைவர் கனகராஜ் கலந்துகொண்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கிரி பாபு, மாநில துணைத் தலைவர் விக்னேஷ் கார்த்தி, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டு மாவட்ட காங். கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: