அம்மா உணவக கூரை விழுந்து கணவன் – மனைவி படுகாயம்: குளச்சலில் இன்று காலை பரபரப்பு


குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையம் உள்ளே கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வெளியூர் பயணிகள், ஏழை, எளிய பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். காமராஜர் சாலையை சேர்ந்தவர் சேவியர் (57), அவரது மனைவி மல்லிகா (52) ஆகியோர் பேரூந்து நிலையம் முன்பு உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் வழக்கம் போல் இன்று காலை டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக உணவகத்தின் மேற்கூரையின் ‘பால் சீலிங்’ திடீரென உடைந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதியினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

The post அம்மா உணவக கூரை விழுந்து கணவன் – மனைவி படுகாயம்: குளச்சலில் இன்று காலை பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: