ஒரே நாளில் 8 விமான சேவை ரத்து


மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நாள்தோறும் சென்னையில் இருந்து காலை 6.20, 9.25, மதியம் 12.30, மாலை 6.40 மணி என 4 விமானங்களும், அதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8:55, மதியம் 12, மாலை 3, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் 4 விமானங்கள் என நாளொன்றுக்கு மொத்தம் 8 விமான சேவைகள் இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் இன்று காலை இன்டிகோ ஏர்லைன்ஸ் சார்பில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் 4 விமானங்களின் புறப்பாடு மற்றும் திருச்சியில் இருந்து சென்னை வரும் 4 விமானங்களின் வருகை ஒரே நாளில் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மாற்றாக, இன்று மாலை 3.30 மணியளவில் சென்னையில் இருந்து திருச்சிக்கும், மாலை 6 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.

இந்த ஏற்பாடுகள் நிர்வாக காரணங்களுக்காக செய்யப்பட்டு உள்ளன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதுபற்றிய தகவலை நேற்றிரவு இன்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்தது. அத்துடன் பயணிகளுக்கும் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டது. இப்பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக, இன்று மாலை 3.30 மணியளவில் சென்னையிலிருந்து திருச்சிக்கும், மாலை 6 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னைக்கு சிறப்பு பெரிய ரக விமானத்தை இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்குகிறது. இந்த சிறப்பு விமானத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், தங்களின் பயண டிக்கெட்டுகளை அந்த சிறப்பு விமானங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் என இன்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.

ஒருசிலர் மதுரை செல்லும் விமானங்களில் தங்களின் டிக்கெட்டுகளை மாற்றிக் கொண்டனர். இதனால் பயணிகள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து சிறப்பு விமானத்திற்கு தங்களுடைய முன்பதிவு டிக்கெட்களை பலர் மாற்றிக் கொண்டனர். மேலும் சிலர், தங்களின் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு, கார்கள் மற்றும் ரயில்களில் திருச்சிக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் திருச்சிக்கோ அல்லது சென்னைக்கோ செல்ல முடியாமல் ஏராளமான பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக காரணங்களுக்காக, இன்று ஒரே நாளில் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் திருச்சி-சென்னை-திருச்சி சென்று வரும் 8 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக, இன்று மாலை சென்னை-திருச்சி மார்க்கத்தில் மாற்று ஏற்பாடாக இன்டிகோ ஏர்லைன்சின் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post ஒரே நாளில் 8 விமான சேவை ரத்து appeared first on Dinakaran.

Related Stories: