அதிக பாரம் ஏற்றி சென்ற ஆட்டோ, சரக்கு வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ மற்றும் அதிக பாரத்துடன் சென்ற சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். காஞ்சிபுரம் பஸ் நிலையம் மற்றும் ஒளிமுகமது பேட்டை பகுதிகளில் ஆட்டோக்களில் பள்ளிக்குழந்தைகளை ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்வது தொடர்பாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தினகரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் 6 ஆட்டோக்களில் அதிக பள்ளிக்குழந்தைகளை ஏற்றி ஆபத்தான முறையில் சென்றது உறுதியானது. இதேபோல் கீழம்பி பகுதியில் அதிக பாரம் மற்றும் தார்பாலின் போட்டு மூடாமல் சென்ற 3 வாகனகங்ளையும் தடுத்து நிறுத்தி தணிக்கை அறிக்கை வழங்கினர். இதில் ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின் ஓட்டுனர்களை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

The post அதிக பாரம் ஏற்றி சென்ற ஆட்டோ, சரக்கு வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: