ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய இயற்கை மருத்துவ தினம்

திருமங்கலம், நவ.19: கள்ளிக்குடி மற்றும் சாத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6வது தேசிய இயற்கை மருத்துவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசேகரன் தலைமை வகித்தார். இயற்கை மற்றும் யோகா மருத்துவர் டாக்டர் அமுதா அனைவரையும் வரவேற்றார். குழந்தைகள் மருத்துவர் மாணிக்கம், பல்மருத்துவர் தில்லை சித்ரா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளான ஜலநேத்தி கிரியா, கண்கழுவும் முறைகள், கபாலபதி சுத்திகரிப்பு உள்ளிட்டவை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தும்மல், இருமல், சைனஸ் பிரச்னை உள்ளவர்களக்கு ஜலநேத்தி கிரியா மூலமாக அவர்களது மூக்கை சுத்திகரிப்பது எப்படி எனவும், கண்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்தும் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் அமுதா எடுத்துரைத்தார். இறுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கண்குவளை மற்றும் ஜலநேத்தி குவளைகள் வழங்கப்பட்டது.

The post ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய இயற்கை மருத்துவ தினம் appeared first on Dinakaran.

Related Stories: