திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா

 

திருக்காட்டுப்பள்ளி, நவ.19: திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலில் கந்தர் சஷ்டி விழா கடந்த திங்கள்கிழமை துவங்கியது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை தினசரி சுவாமிக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

கந்தர் சஷ்டி தினமான சனிக்கிழமை காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் கோயிலில் அமர்ந்து “கந்தர் சஷ்டி கவசம்” பாராயணம் செய்தனர். அபிஷேக, அலங்கார, ஆராதனைகளை கோயில் அர்ச்சகர்கள் செம்மேனிநாத சிவாச்சாரியார், ராஜராஜேஸ்வரன் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா appeared first on Dinakaran.

Related Stories: