நுணாக்காடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

 

திருத்துறைப்பூண்டி, நவ. 19: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு கால்நடை பாரமரிப்புத்துறை தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் தடுப்பு திட்டத்தின் கீழ் 4 வது சுற்று கோமாரி நோய் தடுப்பு முகாம் மற்றும் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நுணாக்காடு ஊராட்சியில் நடைபெற்றது. கால்நடை பாரமரிப்புத்துறை இணை இயக்குனர் ஹமீது அலி, உதவி இயக்குனர் ராமலிங்கம் வழிகாட்டுதலின்படி ஊராட்சி மன்ற தலைவர் சின்னையன் தலைமையில் நடைபெற்றது.

மருத்துவர்கள் சந்திரன், காவியா, கீர்த்தனா, மோகனப்பிரியா, கால்நடை ஆய்வாளர்கள் முருகானந்தம், முருகுபாண்டியன், சாந்தி, முருகேஷ், கால்நடை உதவியாளர்கள் சுபாஷ்சந்திரன், சதிஷ், சத்யா, புவனேஸ்வரி, நாகமணி கொண்ட மருத்துவ குழுவினர் 40 மாடு, ஆடு, கோழிகளுக்கு சிகிச்சையளித்து மருந்து மாத்திரை வழங்கி மழை காலத்தில் கால்நடைகளை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த கால்நடை வளர்போர்களுக்கு மூன்று பரிசு, மேலும் தாது உப்பு வழங்கப்பட்டது. முகாமை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் ஆய்வு செய்தார்.

The post நுணாக்காடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: